பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 235

கூறுகின்றார். “சந்தன சரள சண்பக வகுள, நந்தன. வனத்திடை ஞாயிறு வழங்காது, நவமணி முகிழ்த்த புதுவெயிலெறிப்ப, எண்ணருங் கோடியிருடி கணங் கட்குப், புண்ணியம் புரக்கும் பொன்னிசூழ்ந்த, திருவிடைமருது” (3) என்றும், தெருக்களின் சிறப்பை, “எழுநிலை மாடத்துச் செழுமுகி லுறங்க, அடித்துத் தட்டி எழுப்புவபோல, துண்டுகிற்பதாகைகொண்டு கொண்டுகைப்பத், துயிலினிங்கிப் பயிலும் வீதித் திருமருது’ (25) என்றும் புனைந்து கூறுவர். சீகாழிப்பதி ஊழிக்காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் தோணிபோல் மிதந்த செய்தியைக் குறிப்பிட்டு, அது, “காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த காழி (19) எனவும், வேதம் போலும் கோபுரங்களும் சிவாகமம் போலும் மணிமேடைகளும், இந்திரன் போலும் எந்திரவாவிகளும் “எங்கணும் நிறைந்த வெங்குரு” (22) எனவும், தண்ணிர்ப் பந்தரும் அன்ன சத்திரங்களும் ஆடரங்குகளும் கலை பயில் கழகங்களும் மலர் மன்றங்களும் மணிநெடு வீதியுங்கொண்டு, “பூமக ளுறையுளாரமென விளங்கும், பெரும் புகழ்க் காழி” (28) எனவும், செந்தளிரும் மதுமலரும் காய்த் திரளும் செங்கனியும் தாங்கி நிற்கும் மாமரத்தை, வயிரமும் நீலமும் மரகதமும் மாணிக்கமுமாகிய மணிகள் “கிடைத்த சீர் வணிகரிற் படைத்த மாந்தருவும்” (16) எனவும் அரமியத்தைப் புன்னைப் பொழி லெனவும் செய் குன்றைக் கொன்றைக் காவெனவும் மயங்கி மொய்த்த வண்டினத்தின் கரு நிறத்தால் இரவு