பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 * ஒளவை சு. துரைசாமி

யாவும் “மன்னுயிர்” என்றும், “தொல்லுயிர்” என்றும் சிறப்பிக்கப்படுவதால் அவை கடவுளாகிய முதற் பொருளால் படைக்கப்படாமல் அப்பொருளே போல என்றும் நிலை பேறுடைய உள்பொருளாகும். ஏனை உலகமும் உலகிலுள்ள பொருள்களும் அம்முதற் பொருளால் படைக்கப் படுவனவாம். கடவுளை முதற்பொருள் என்று குறிப்பதோடு “உலகு இயற்றியான்” எனவும், “உலகு படைத்தோன்” (நற். 240 எனவும் குறித்திருப்பது இக்கருத்துப் பற்றியே யாம்.

உயிர்கள் இன்ன உரு இன்ன நிறம் என்று சொல்ல வொண்ணாத உருவுடையன; ஆயினும் அவை உலகியற் பொருள்களான உடம்பையும் ஏனைப் பொருள்களையும் இயக்குவதும் அவற்றோடு கூடி இயங்குவதும் செய்வன, அவ்வியக்கத்தால் அவற்றிடையே வினைகள் தோன்றி நிலவுகின்றன ‘வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலைக் காலமொடு தோன்றும்” என்று நூலோர் கூறுகின்றனர். செய்யும் தொழிலுக்கேற்ப ஊதியமும் உறையுளும் அமைவது போலச் செய்யும் வினைக்கேற்ப உயிர்கட்கு நுகர்ச்சியும் உடம்பும் அமைகின்றன. உடம்பையும் நுகர் பொருளையும் படைத்து அளிக்கும் வகையில் முதற் பொருளாகிய கடவுள் மேன்மையுற்று விளங்குகிறார். இதனால் கடவுட்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பு படைப் போனுக்கும் படைக்கப்படுபொருட்கும் உள்ள