பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 :ே ஒளவை சு. துரைசாமி

9. வில்லை..உண்மையே

இதன்கண் வில்லை வட்டமுறை வளைத்து அவுணரது வட்டமான மதில் மூன்றையும் மாய்த்த வனது தில்லை வட்டத்தைத் தொழுவார் வினை அவர் வட்டம் கடந்து ஒடுமென்பது உண்மை என்பர்.

10. நாடி.இருக்கவே. தில்யம்பலத்தாடிபாதம் என் நெஞ்சுள் இருக்கையில் நாரணனும் நான் முகனும் தேடித் திரிந்து காணவல்லரோ என்று இயம்புகிறார்.

11. மதுரவாய்.உய்ம்மினே இதன்கண், மங்கை பங்கினனும் சதுரனுமான அம்பலவன் மலையை ஆர்த்தெடுத்த இராவணன் முடிபத்தும் இறுமாறு மிதித்த சேவடியைச் சென்றடையின் என நம்மைத் தெருட்டுகின்றார்.

இன்னோரன்ன குறுந்தொகைகள் பாடி இன்புற்ற நாவுக்கரசர், தில்லையின் நீங்கி வேட்களம் பணிந்து கழிப்பாலைக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார். ஒரிரு நாட்களில் அவர்க்குத் தில்லைப்பதியின் நினைவு வந்துவிட்டது.

தில்லைப்பெருமானே நினைவுக் கெட்டாத நிலையினனாதலால், நினைத்தற்கரியன்; அவனது நினைவு எழுந்ததும் அவரால் கழிப்பாலையில் இருக்க முடியவில்லை. கடலில் வாழினும் கரையை நினைந்து போந்து வளைகள் முத்தின் கொழுந்து களை மனப்படப்பையில் சொரியும் காட்சி கழிப்