பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 32

வெட்டுக்களில் இந்த ஏற்பாட்டின் சார்பாக வரி வகைகள் முறை செய்யப்படுகின்றன. (38-41/1937-38)

இச்சோழ வேந்தனுக்குப் பின் அரசு கட்டி லேறியவன் மூன்றாம் இராசராசன். இவன் கி.பி. 1216-இல் இளவரசாயவன். இவன் காலத்தில் திரு வானைக்காவில் பல கல்வெட்டுக்கள் தோன்றி யுள்ளன. -

இவனுடைய 20-ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் திருவானைக்காவை, பாண்டி குலாசனி வளநாட்டு பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்று (சங்ககாலப் புல்லாற்றுார்; இது பில்லாறு எனவும் கல்வெட்டுக் களில் வழங்கும்) காரிசாத்தன் குறையிற் காணியுடை ஒடமுடையாரில், பொல்லாதான் செல்வனான பொன்னி மழநாடாள்வான், உடையான் நெஞ் சுண்டியான நெற்குப்ப அரையன், குன்றன் சீகயிலாய முடையானான திருவரங்க நாடாள்வான் என்ற மூவரும் கோயில் ஆதிசண்டேசுரக் கன்மி களுக்கு (தருமகருத்தர்களுக்கு) நிலம் விற்று விலைப்பிரமான இசைவுத் தீட்டு நல்குவதைத் தெரிவிக்கிறது.

இவ்வாறே 22-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், காரி சாத்தன் குறையில் காணியுடைய ஒடமுடை யாரில் கூத்தன் குன்றனான கீழாற்றுார் அரையன், இவன் தம்பி ஆரம்பூண்டான், இவன் தம்பி தாழி, விடங்கன் உடையனான மழநாட்டு விழுப்பரைய நாடாள்வான், இவன் தம்பி திருவரங்கன், பேராயிர

த.செ.-21