பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இ. ஒளவை சு. துரைசாமி

அதற்கு மறுதலையான திருவருள் உயிருணர்விற் கலந்து நல்லன தீயன காட்டும் போது அதன் உண்மை உணரப்படும். அதற்காகவே, “என்னுள் வந்து நல்லனவும் தியனவும் காட்டாநின்றாய்” என்றும், அடியேற்குக் காணாகாட்டும் கண்ணாம் கருகாவூர் என்றும் நம் நாவேந்தர் நவிற்றுகின்றார்.

நல்லறிவால் நோயுண்மை உணர்ந்தவன், மருத்துவ வறிவு சிறந்தவராயின் நோய் முதல் நாடுவர். அதுபோல, நன்ஞானிகள் முன்பு தெரியா திருந்த நல்லனவும் தீயனவும் பின்பு தெரிகின்றபோது அதற்குக் காரணம் திருவருளின் காட்டும் உதவி எனத் தெரிகின்றனர். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் காணுங்கால் இன்பம் பெருகுவது இயல்பாக அறிந்தது. அந்த இன்பமும் திருவருளின் பயன் என்பதை சிவஞானிகள் தெளிந்து, திருவருட்கு முதலாகிய சிவத்தைக் காண்பதற்கு விருப்ப மிகுவர்.

இவ்விருப்ப மிகுதியால் திருநாவுக்கரசர் சிவத்தைக் காண முயல்கின்றார். காணும் திறம் யாது ? காணப்படும் உருவும் அருவமுமாகிய உலகியற் பொருள்களையும் அவற்றின் செயல்களை யும் அறிவதும், அறிந்தவற்றை மனத்தால் எண்ணு வதும், பின்பும் மனத்தின் கண் உள்ள எண்ணங்களை உள்ளத்தின்கண் கொணர்ந்து உணர்வதும் என வரும். இவற்றை நால்வகைப்படுத்து முறையே வாயிற் காட்சி, மானதக் காட்சி, தன் வேதனைக் காட்சி யோகக் காட்சி என்றும் கூறுவர். மானதக் காட்சி