பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 17

நின்று நுகர்ச்சிக்குரிய காலம் வந்ததும் தெய்வத்தின் ஆணையால் அவனை எவ்வகையாலேனும் அடைந்துவிடுகிறது. அதனால் அதனை ஊழ்வினை என்று அறிஞர் அறிவிக்கின்றனர். ஊழ்வினையை ஊட்டுவிக்கும் பணி கடவுட் பொருளின் ஆணைவழி இயங்கும் தெய்வங்களின் செயலாதலால், தெய்வ வழிபாட்டால் வினைப்பயனது நுகர்ச்சி கால வகையில் வேறுபடும் என்ற கருத்துப் பண்டையோர் கொண்டிருந்தனர். குன்றவர் முருகனுக்கு வழி பாட்ாற்றி வேட்டம் செல்வதும், ஆயர் மாயோ னுக்குக் குரவையாடி வழிபாடியற்றுவதும், வேளாளர் இந்திர விழா எடுத்தலும், பரதவர் சுறவுக்கோடு நட்டு வருணனுக்கு வழிபாடு செய்து மீன் வேட்டம் புரிவதும், கொற்றவையை வழிபட்டு எயினர் மறத்தொழில் செய்வதும் சங்க இலக்கியங்களில் காணப்படுவது இது பற்றியேயாகும்.

உலக வாழ்வில் காணப்படும் உயிர்கள் அனைத் துக்கும் இன்பம் பெறுவது ஒன்றே குறிக்கோளாகும். “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுதான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்பது தொல்காப்பியம். இந்த இன்பப் பயன் பெறுவது குறித்தே உலக வாழ்வு நடைபெறுகிறது; உயிர்களால் செய்யப்படும் வினைகள் யாவும் இக்குறிக்கோளையே நாடி நிற்கின்றன. இந்த இன்பப் பயன்பெறுவது பற்றித் தோன்றும் வினை இடையீடு படுமிடத்தும் இடையூறு எய்துமிடத்தும் அவற்றை நீக்கும் செயல்

த.செ.-2