பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 இ ஒளவை சு. துரைசாமி

திருமுன் உடன்படிக்கை செய்து கொண்டனர். (483/1908)

இதற்கு அடுத்த ஆண்டில் மேலே கண்ட அரசியல் தலைவனான சீயன் உடையபிள்ளையோடு தொண்டன் சேமனான இராசராச மூவரையன் துணையாவதாக உடன்பாடு செய்து கொண்டான். (480/1908)

இம்மூன்றாம் குலோத்துங்கனுக்குக் “கோனே ரின்மை கொண்டான்” என்ற சிறப்புப் பெயரும் உண்டாதலால், திருவானைக்காவில் காணப்படும் இவனது 21-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், மதுரை யும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட திரிபுவன சக்கரவர்த்தி என்பதோடு கோனேரின்மை கொண்டான் குலோத்துங்க சோழ தேவர் எனக் குறிக்கின்றன. கோனேரின்மை கொண்டான் என்ற சிறப்புப் பாண்டியர்களுக்கே சொல்லப்படுவது.

இவ்வேந்தனுடைய தலைமையதிகாரிகளில் மீனவன் மூவேந்த வேளான் முன்னிற்க, திருவா னைக்கா திருக்கோயிலில் இருந்து தொண்டைமான் வேண்டி விண்ணப்பிக்க, பழுவூரான இராசேந்திர சோழ நல்லூரில் சில நிலங்களையும் ஏனாதி மங்கலத்தில் சில நிலங்களையும் தொகுத்துக் குலோத்துங்கசோழன் பழுவூர் என்று பெயரிட்டுப் பழுவூருடையான் நக்கன் அறவன் என்பானுக்கு “ஜன்மக் கணியாகத் தருகின்றனர். மற்ற மூன்று கல்