பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

4

ஞானசம்பந்தரின் ஞானக் காட்சி - நெய்தல்

நெய்தல் என்பது கடற்காட்சியும் கடற்கானற் காட்சியும் தன் கண் கொண்டது. ஞானசம்பந்தர் நெய்தல் நிலத்தில் தோன்றி அது நல்கும் இயற்கைக் காட்சிகளில் தோய்ந்த உள்ளம் படைத்தவர். கடற் பரப்பும் அதன் கரை சேர்ந்த நாட்டின் நல்ல எழிலும் அங்கு நிலவும் உயிர் வாழ்வின் ஏற்றமும் அவரது ஞானக் கண்ணுக்கு இனிய விருந்து செய்துள்ளன. அவரது ஞானவுள்ளம் உலகியல் வாழ்வில் அவ்வப் போது தோன்றும் தூசும் துரிசும் கலந்து மாசுபடாத மாண்புடையது. பொறி வாயிலாக அறிவுப்பயிர் முளையும் இளமைக் காலத்தேயே சிவஞானப்பால் பாய்ந்து சிறப்புச் செய்தமையின் அதன்கண் சிவப் பயிர் முளைத்துச் செந்தமிழ்க் கவிமணிகளை ஈன்று சிவஞானச் செழும்பயனே விளைவித்தது.

திருஞானசம்பந்தர் பிறந்து வளர்ந்து ஞானப் பேறு பெற்றது. இச்சீர்காழி, இது நெய்தல் நிலத்தின் நீர்மை நிறைந்த பழம்பதியாகும். தென் தமிழ்