பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 ஒளவை சு. துரைசாமி

ஆனைக்காவுடைய பெருமானுக்குக் காளையூர்தி யொன்றைச் செய்து வைத்து, திருப்பணிக்காக நிலங்கள் சில விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு அளித்தான். (தொகுதி III எண். 76)

இரண்டாம் குலோத்துங்கன் மகனான இரண்டாம் இராசராசன் கி.பி. 1146-இல் அரசனா னான். ‘தந்தையில்லோர்க்குத் தந்தையாகியும் தாயில்லோர்க்குத் தாயாகியும் மைந்தரில்லோர்க்கு மைந்தராகியும் மன்னுயிர்கட்கு உயிராகியும்’ நாட்டவர் வியந்து போற்ற வாழ்ந்தான் என இவனுடைய மெய்க் கீர்த்தி விளம்புகிறது. “மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வரராச ராசன்” என்று தக்கயாகப் பரணி இவ்வேந்தனைப்

புகழ்கின்றது.

இவ்வேந்தன் கி.பி. 1146-இல் அரசு கட்டிலேறி னான் என்பர். நான்கு ஆண்டுக்குப் பின் கி.பி. 150-இல் இவனது கல்வெட்டொன்று இத் திருவானைக்காக் கோயிலில் உளது. அதன்கண், அரையன் சுந்தனான வானகோப்பாடி சேரமான் என்ற செல்வன் பூசைத் திருப்பணிக்காக ஊரவர்பால் நிலம் வாங்கிக் கோயிற்குக் கொடுத்தான். (27/1937-38)

மூன்றாம் குலோத்துங்கன் கி.பி.178-இல் சோழ வேந்தாயினான். தன்னொடு மாறுபட்ட பாண்டிய சேரரை வென்று மேம்பட்டமைபற்றி இவன் திரிபுவன வீரதேவன் என்ற சிறப்பெய்தினான்.