பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 283

கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்தன பலவுமாகும். திருவந்தாதியில் வருவன பலவும் அகனைந்திணை யல்லாதவை யாதலின், அவற்றை முதற்கண் சிறிது காண்போம்.

ஒருத்தி சிவபெருமானைக் கண்டு அவன்பால் கருத்திழந்து, உடல் மெலிந்து வளைசோர்ந்து வருந்து கின்றாள். அவள் தோழி போந்து “நீ இவ்வாறு வளையும் கலையும் இழந்து நிற்பதால் பிறர் இகழும் பழியுண்டாகும்; நம் பெண்மைக்குரிய சிறப்பும் போம்” என்று கழறிக் கூறுகின்றாள்;

“பாதம் புவனி, சுடர்நயனம், பவனம் உயிர்ப்பு, ஒங்கு ஒதம் உடுக்கை, உயர்வான் முடி, விசும் பேஉடம்பு, வேதம் முகம், திசை தோள், மிகு பன்மொழி கீதம்,

x - என்ன போதம்; இவற்கோ மணிநிறம் தோற்பது? பூங்கொடியே”.

என்று உரைக்கின்றாள். தன்னால் பழியாவதும்,

பெண்மை நலம் போவதும் ஆகூழும் போகூழுமாம்

என்ற கருத்தை எடுத்தோதி,

“ஆவ்ன யாரே யழிக்கவல் லார்.அமை யாவுலகில் போவன யாரே பொதியகிற் பார்புரம் மூன்றெரித்த தேவனைத் தில்லைச் சிவனைத் திருந்தடி கைதொழுது தீவினை யேன்.இழந் தேன்கலை யோடுசெறிவளையே,

என்று விடையிறுக்கின்றாள். இப்பகல் நிகழ்ச்சி அவள் நெஞ்சையலைப்ப, இரவில் சிறிது கண்ண யர்ந்து கனவு காண்கின்றாள். அக்கனவில் பரமன்