பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 இ. ஒளவை சு. துரைசாமி

‘பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச் சென்றிரவேன் ஒருவரை யாதொன்றுமே” (திருவிடை 3) என்ற துணிவுடனே ஒழுகுவர்.

திருவெண்காடரான பிள்ளையார் காவிரிப் பூம்பட்டினத்துக் கடல் வணிகர் குடி முதல்வராய் விளங்கினவர் என்றதற்கேற்ப, அவருள்ளம் கடலிற் கலம் அமைத்துச் செலுத்தும் துறையில் நன்கு பயின்றிருந்தது. அதனால் உடம்பைக்கலமாகவும், தீயொழுக்கம், பொய்ம்மை பிணிஇடும்பை முதலிய வற்றைச் சரக்காகவும், வினையை மீகாமனாகவும், கருப்பையைக் கடற்றுறை நகராகவும், புலன்களைச் சுறா மீனாகவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும்பத்தை நங்குரக் கல்லாகவும், நிறையைக் கூம்பாகவும் உணர்வைப் பாயாகவும் உருவகம் செய்வதும் (கோயில் 16), பிறி தோரிடத்தில் உலகைக் கடலாகவும், உடம்பைக் கலமாகவும், தோலைப் பலகையாகவும், எலும்பை ஆணியாகவும், நரம்பைக் கயிறாகவும், முதுகெலும்பைக் கூம்பாகவும், காம முதலிய குற்றங்களை நிறையாகவும், நெடுநீர் என்னும் குற்றத்தை நங்குர நாணாகவும், மடியை நங்குரமாகவும் மனத்தைப் பாயாகவும் ஆசையைக் காற்றாகவும் தானமுதலிய குணங்களைத் தீவுகளாக வும் உரைப்பதும் (கழுமல 15, வேறோரிடத்தில், வளியும் பித்து முதலியவற்றைக் காற்றாகவும், நரையை நுரையாகவும், தோலைத் திரையாகவும், இருமலைக் கடல் முழக்காகவும், பசிவெகுளி