பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 195

யறிவால் ஆண்டவன் திருவருளால் பெறுதல் கூடும் என்னும் உண்மை நெறியை மறைத்து நின்ற காலமாகும்.

ஆகவே, இக்காலம், நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலம், இற்றைக்குச் சுமார் சற்றேறக் குறைய 1300 யாண்டுகட்கு முற்பட்ட காலமாகும். இக்காலத்தில், வினையுணர்வுக்குத் தலைமையும், ஆண்டவன் திருவருட் சிறப்பிற்குக் கீழ்மையும் மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கும் புதுக் கொள்கை களும், புதுச் சமய நெறிகளும் கற்பித்து வந்தன. அதனால், நம் ஆளுடைய பிள்ளையார், வினை களையும், அவை பயக்கும் பயனையும், வினைத் தொடர்பைக் கெடுக்கும் பரமனது முதன்மையையும், பிறவற்றையும் விளக்கியருளும் கடன்மையுடையரா னார். அவரது அருட்பாடல்கள் பலவும் வினையின் தொடர்பறும் முறைமையை யுணர்த்தும் நோக்கமே பெரிதும் உடையவாயின.

வினைகள்யாவும் பண்டைவினை, நிகழ்வினை (செய்வினை), எதிர்காலவினை யென மூவகையாகும். அவையாவும் பரமன் திருவருள்வழி நிற்பார்முன் வலியழிந்து, தொடர்பற்றுக்கெடும் என்பது ஆளுடையபிள்ளையார் மக்கட்கு அறிவுறுத்திய வினையுணர்வாகும். “தொல்லை வல்வினை தீர்ப்பர் சுடலை வெண்பொடி யணிசுவண்டர்’ (திருத் தெங்கூர்), “மெய்த்தன்னுறும் வினைதீர் வகை தொழுமின்” (ஆலந்துறை, “வெய்யவினை நெறிகள்