பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 153

கனிந்துரைக்கின்றார். காணாதன காட்டலும், கேளா தன கேட்பித்தலும் திருவடிக்காட்சியின் விளைவு என்பதைச் சான்றோர்களின் திருப்பாடல்கள் தெளிவாக வுரைத்தலின், நாவரசர் கயிலைக் காட்சியில் வைத்துக்

“கண்டேன் அவர் திருப்பாதம்;

கண்டறியாதன கண்டேன்”

எனக் கட்டுரைக்கின்றார்.

கயிலையை நினைந்து பாடும் திருநேரிகையில், அப்ப மூர்த்திகள், இராவணனது அறியாமையையும் அவனைச் சிவபெருமான் திருத்திய அருளுடைமை யையும் நினைந்து பரவுகின்றார். ஒருபால் இராவணன் கண் சிவந்து கயிலையை எடுப்பதும் உமைதேவி அஞ்சுவதும் நாவரசர் நினைக்கின்றார்.

“கருத்தனாய்க் கண் சிவந்து

கயிலைநன் மலையைக் கையால் எருத்தனாய் எடுத்தவாறே

ஏந்திழை அஞ்ச”

என்று பாடுகின்றார். உடனே, அத்துணை ஆற்றலும் ஆர்வமும் உடையனாதலால் அரக்கனாயினும் திருந்துதற்குரியன் எனச் சிவன் திருவுள்ளம் கொண்டு நின்றான்; அதனை நாவுக்கரசர், நன்குணர்ந்து, “திருத்தனாய் நின்ற தேவன்” என்றும், திருத்தி உய்வித்த சிறப்புத் தோன்றச் சிவன் “திருவிரல் ஊன்ற வீழ்ந்தான்” என்றும் உரைக்