பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 249

‘சித்தமார் சிவவாக்கிய தேவர் எனவும், வரகுணனை, ‘பெரிய அன்பின் வரகுணதேவர்’ எனவும் குறித் துரைப்பது வரலாற்றுண்மை பொதிந்த கட்டுரை யாகும்.

அந்நாளில் கற்றுவல்ல புலவர்க்கு அறிவா ராய்ச்சி வகையில் இன்பந்தந்தவை. ஏழிசைச்சூழல் போல் இனிய நுட்பம் பொருந்திய அகத்துறைப் பாட்டுக்களாகும். அத்துறையில் பிள்ளையார் பல பாட்டுக்களைப்பாடி வழங்கியுள்ளார். அவை நான்மணிமாலை மும்மணிக்கோவைகளில் உள்ள வற்றினும் மிகுதியாகத் திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் உள்ளன. அவற்றுள் “துணையொத்த கோவை’ (73) எனவரும் பாட்டுத் திருக்கோவையார் கருத்தைத் தன்கட்கொண்டு விளங்குவது.

பிள்ளையாரால் இறைவனுக்குரிய மலைக ளென, இமயம், கொல்லி, சிராமலை, விந்தம், மந்தரம், இந்திரம், நீலம், வெள்ளை, பரங்குன்றம், மகேந்திரம், வெண்குன்றம், செங்குன்றம், நெற்குன்றம், நெடுங் குன்றம், கழுக்குன்றம், முதுகுன்றம் (57.9 முதலியன குறிப்பிடுகின்றன. சிவனுக்குரிய ஊர்களென குற்றாலம், நெய்த்தானம், துருத்தி, அப்பர், வேள்விக் குடி, தோணிபுரம், பழனம், ஆரூர், இடைமருது, திருச்சோற்றுத்துறை, நியமம், புகலூர், புறம்பயம், பூவணம், திருவண்காடு, பாச்சில், அதிகை, ஆவடுதுறை, நல்லம், நல்லூர், கடம்பூர், கடம்பந் துறை, புன்கூர், பாராய்த்துறை, எதிர்கொள்பாடி,