பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 193

88) என்றாற் போல்வன, வினை செய்யுமிடத்து, எதிர்பாராமல் வரும் இடர்கட்கு உள்ளம் உடை யாமல் ஊக்கம் கோடற்கெழுந்தவை என்றும், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றாற்போல்வன, “இன்பமும் இடும்பையும் உணர்வும் பிரிவும், நண் பகலமையமும் இரவும்போல, வேறுவேறியலவாகி மாறெதிர்ந், துளவென வுணர்ந்தனை” (அகம் 327) எனவுணர்ந்து, இவற்றைப் பொருள்செய்யாது, செய்வினையைக் கடைபோக ஆற்றுவது குறித்துப் பிறந்த அறவுரையென்றும், “துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையில்வழி” என்றாற்போல்வன, உயிரின் வழி வினை நிகழ் தலுண்டேயன்றி, வினையின்வழி உயிர் இயங்குவ தில்லை என்றும் காட்டக் காண்கின்றோம். இதுவே தேவார காலத்திற்கு முன்னிருந்த சான்றோர் கொண்டிருந்த வினையுணர்வாகும்.

இதற்கிடையே, “காமஞ் சான்ற கடைக்கோட் காலை மக்களொடு துவன்றிய கிழவனும் கிழத்தியும் சிறந்தது.பயிற்றல் வேண்டும் என்ற பண்டைய முறை மாறி, “குழவியிடத்தே துறவு விரும்பி, ‘இன்னா தம்மவுலகம், இனிய காண்க விதன் இயல்புணர்ந் தோரே” என்றும், “ஒடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே” என்றும் வந்த உரை களால், உலக வாழ்வில் மக்கட்கு. உவர்ப்பும், செய்யும் வினையாவும் துன்பமுடிவின என்ற முடியும் மக்கள் கருத்தில் இடம் பெறத்தொடங்கின. முயற்சியுடை

த.செ.-13