பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 137

குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக என்றார். கலக்கமோ மயக்கமோ இன்றி உள்ளதன் உண்மையை உள்ளவாறு கண்டு சிந்தித்துத் தெளிவு பெறுவிக்கும் கருவியாதல் பற்றித் திருந்து சாத்துவிகம் என்றார். -

இங்ஙனம் குணமும் கரணமும் பொறியும் ஆகிய மூன்றும் ஒன்றி ஒருமுகப்பட்டு நோக்குமிடத்து கூத்தப் பெருமானது அருட் கூத்து நோக்கும் அறிவின்கண் இன்பம் சுரத்தலால் ஆனந்தக் கூத்து என்றும், அவ்வாடலும் முடிவின்றியும் வேறு ஒப்புக் காண்டற்கின்றியும் பெருமையுற்றுப் பிறங்கிடுவது பற்றி எல்லையில் தனிப் பெருங்கூத்து என்றும் சேக்கிழார் கூறுகின்றார். கரணமும் கருவியும் ஒன்றிக் காணக்காணச் சிவானந்தம் உவட்டெடுத்துப் பெருக அதன்கண் திளைத்து மகிழ்ந்து உளம் உருகி உடல் பூரித்த ஆரூரை, “மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்” என்றார். உலகியல் மகிழ்ச்சியில் மலர்ந்தார்க்கு மறுகணத்தே நெகிழ்ச்சியும் சோர்வு முண்டாதலால் சிவபோகமகிழ்ச்சி மாறிலா மகிழ்ச்சி எனப்பட்டது,

இவ்வண்ணம் மகிழ்ச்சியால் மலர்ந்த ஆரூரர், சிவபரம் பொருளின் அருட்கூத்துக் காணும் பேரின்பத்தில் திளைத்த தமது மெய்யறிவு கைவரப் பெற்றுத் தாம் கண்டு துய்த்து மகிழ்ந்த திருக்கூத்தின் சிவபோகத்தின் நலம் பாராட்டலுற்று, “தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்தன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு