பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஒளவை சு. துரைசாமி

சோதி”, “உம்பர் உண்டுபோலும் ஒர் ஒண்சுடர் என்று இயம்புகின்றார். அப்பேரொளிதான் எங்கே உளது என்பார்க்கு, அண்டத்து அப்பால் உளது என்பாராய், “இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழுலகும் கடந்து அப்பால் நின்ற பேரொளி” (2:51) என்று உரைக்கின்றார். அப்பேரொளியின் உண்மை யுணர்ந்த விண்ண வரும் மண்ணகத்துப் பெரி யோரும், அதன் நிறம் இன்னது என்று அவர்களால் அறிய முடியவில்லை; அதனால் “என்னினும் என்று இன்னம் தாம் அறியார்” என்று இயம்புகின்றார்.

பெரியோருள், அண்டம்கடந்து அதனைச் சூழ நிறைந்த இருள் கடந்து அதற்கு அப்பால் உள்ளது ஒரு பேரொளி என அறிந்தோர் உண்டு என்பது இனிது புலப்படவே, “அண்டமார் இருளுடு கடந்து உம்பர் உண்டு போலும் ஒர் ஒண்சுடர்” என்றார் போலும், உரையசை அங்ஙனம் ஒளியைக் கண்டும் அதன் நிறம் உரு முதலிய கூறுகளை அறிய இயலாமைப் பற்றிக் “கண்டு இங்கு யார் அறிவார்”, ஒருத்தரும் இல்லை என்பதாம்.

எல்லாம் வல்ல இறைவன் “காட்சிக்கு எளிய'னாதல் அவற்கு மாட்சியாக இருப்ப, ஒருத்தராலும் அறியவொண்ணாதவனாக காண் டற்கு அரியனாக இருப்பது எவ்வாறு பொருந்தும்? எனின், காண்டற்கு உரிய நெறியுளது; அந்நெறியே நோக்கினால், மிக்க எளியனாய்த் தோன்றி இன்புறுத்துவன்.