பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 இ ஒளவை சு. துரைசாமி

கின்றார். அது கேட்கும் இறைவன் புன்னகை பூப்ப, - சேரமான் மீட்டும் வணங்கி, “பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய், மருவு பாசத்தை யகன்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய், உனை அன்பால் திருவுலாப் புறம்பாடி னேன்; திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்” என்று வேண்டி நிற்கின்றார். இறைவன் இசைகின்றான்; இவரும் அத் திருவுலாப் புறத்தை இறைவன் திருமுன் ஒதுகின்றார். - - -

திருக்கயிலாய ஞானவுலா ஆதியுலா என்றும் திருவுலாப் புறமென்றும் சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. இதனை ஆதியுலா என்று கூறுவதன் குறிப்பை நோக்கின், தமிழ் இலக்கியத் தொகையுட் காணப்படும் உலா நூல்களுள் இதுவே மிகத் தொன்மையும் முதன்மையும் வாய்ந்ததென்பது துணியப்படும். இவ்வுலா எழுவதற்கு முன் தமிழில் உலா நூல் ஒன்று இருந்ததாகத் துணிதற்குச் சான்று கிடைத்திலது. இப்போது காணப்படும் உலா நூல்களும் அவற்றின் இலக்கணங்களும் பெரும் பாலும் இவ்வுலா நூலிற்குக் காலத்தால் பிற்பட்டன வாகவே இருக்கின்றன. -

பரமன் செவ்விய கோலமணிந்து தேவர் பலரும் பல சிறப்புடைய பணிகளைச் செய்ய, அவர் வேண்டுகோட்கிசைந்து உலா வருங்கால், அவனைப் பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாகவுள்ள மகளிர் பலர் கண்டு நயக்கின்றனர். அவர்கள்

j