பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 இ. ஒளவை சு. துரைசாமி

புணர்ந்த ஞான்று. திருமணப் பந்தருள் அமரர் முன் புகுந்தறுகு சாத்தி நின், தமர் பெயரெழுதிய வரி நெடும் புத்தகத், தென்னையும் எழுத வேண்டுவல்” கோயில்4 என்பது அவ்வழக்கினை எடுத்துக்காட்டு கிறது. வருவாயுள் ஆறிலொன்று அரசர்க்கு இறுக்க வேண்டிய முறை அடிகள் காலத்து மாறிவிட்ட தென்பது, ‘அரசு கொள்கடமை யாறிலொன் றென்னும் புரைதீர் முறைமை புதுக்கினை” (கழுமல 25) என்ற அடிகள் காட்டுகின்றன.

பட்டினத்தார் காலத்தே அவர்க்கு முன்னோர் சிலருடைய வரலாறுகளும் பல இனிய பழமொழி களும் மக்களிடை பயில வழங்கியிருந்தன. புத்த ராகிய சாக்கிய நாயனார் கல்லெறிந்து சிவனை வழிபட்டதும் (இடைமரு25), திருஞான சம்பந்தர் ஞானப் பாலுண்டு தோடுடைய செவிய னென்றும், பீடுடைய பெம்மான் என்றும் பாடியதும் (கழுமல , திருநாவுக்கரசரும் நம்பியாரூரரும் வித்தகப் பாடல் பாடியதும் (திருவிடை 28), பெருந்துறைப்பிள்ளை யாகிய திருவாதவூரரது பேரன்புநெறியும் (திருவிட 28), பெருஞ் செல்வத்தை அவமதித்துப் பேரந்த சிவவாக்கியர் சிறப்பும், வரகுணதேவரின் வான்புகழ் வரலாறும் பிறவும் பிள்ளையாரால் விதந்து கூறப்படுகின்றன. இவருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் “வித்தகப் பாடல் முத்திறத்தடியர்’ எனவும், திருவாதவூரரைத் ‘திருந்திய அன்பிற் பெருந்துறைப்பிள்ளை” எனவும், சிவவாக்கியரைச்