பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 177

இவட்குற்ற வேறுபாட்டினை நன்கு ஓராது வெறியயர்தலும் கட்டுக் காண்பதும் பிறவும் வீணே செய்கின்றனர் என்பதும் பெறப்படும், உங்கள் உணர் வின்மையைக் கண்டு, அந்த ஞானசம்பந்தனாகிலும், வந்து கூடுதல் நினையானாயினும், தன் மாலை யாயினும் தருகின்றானோ எனின் அது தானும் இல்லை; அதனால் யான் சோர்ந்து மெலியாது ஆற்றியிருப்பது எவ்வாறு முடியும் என்பாள், “எங்ஙனம் யான் சங்கு தாங்குவதே” என்கின்றாள்.

தோழியின் துணைபெற்றுத் தலைவியொடு கூடியொழுகும் தலைமகனைச் சேட்படுக்கலுற்ற தோழி, அவனை, “பகற்போது மறைந்தது. இங்கு நில்லற்க” என்று கூறுபவள், ஞானசம்பந்தப் பிள்ளையார் சிவபரம்பொருளின் திருமுன்நின்று அருள்பெறும் திறத்தை அழகு திகழக் கூறுகின்றாள்:

“சிறுபால் கலித்த விளிகுரல் கிண்கிணி சேவடி புல்லிச் சிறுகுரல் பயிற்றி அழுதுண் செவ்வாய் அருவி தூங்கத் தாளம் பிரியாத் தடக்கை யசைத்துச் சிறுகூத் தியற்றிச் சிவனருள் பெற்ற நற்றமிழ் விரகன் பற்ற லர்போல இடுங்கிய மனத்தொடும் ஒடுங்கிய சென்று பரிதியும் குடகடற் பாய்ந் தனன் கருதி நிற்பது பிழைகங்குல் இப்புனத்தே” (கோவை, 19)

இதன்கண் ஞானசம்பந்தப் பிள்ளையார் பாதத்திற் கட்டிய கிண்கிணி சிறு குரல் மிழற்ற, திருவாயில்

த.செ.-12