பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இ. ஒளவை சு. துரைசாமி

டான பயனும் சிற்சில இடங்களில் நம்பியாண்டார் நம்பிகள் நமக்கு அறிவுறுத்துகின்றார். -

பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோல்தோணி கண்டீர் - நிறையுலகில் பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன் தன்மாலை ஞானத் தமிழ் என்பதனால், திருப்பதிகங்கள் பிறவிக்கடலை நீந்தற்குத் துணைசெய்யும் என்று உணர்த்துபவர், திருக்கலம்பகத்தில், - - -

“பெறுபயன் மிகப்புவியுள் அருளுவன பிற்றைமுறை பெருநெறி யளிப்பண்பல் பிறவியை ஒழிச்சுவன உறுதுயரழிப்பன” என்று மீட்டும் வற்புறுத்துகின்றார். . -

இத்திருப்பதிகங்கள் முற்கூறியவாறு பிறவிப் பிணி கெடுத்தற்குப் பெருந்துணையாம் என்பதை. “அந்தம் உந்தும் பிறவித்துயர்திர அரனடிக்கே பந்த முந்துந் தமிழ் செய்த பராபரன்” என்று சண்பை விருத்தத்தில் வலியுறுத்தி, இவை பத்திநெறியை மக்கட்கு உணர்த்தி, அதுவே சிவனருளைப் பெறுதற்கு நேரிய பெருவழியாம் என்று பல பாசுரங்களால் நமக்கு அறிவுறுத்து கின்றார். -

ஆளுடையார். திருத்தொகையில், இப்பதிகங் களைப்பற்றிக் கூறலுற்ற நம்பியாண்டார் நம்பிகள், “கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே, பத்தித்