பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 ஆ ஒளவை சு. துரைசாமி

நம்பியாரூரர், பண்டு சிவ்னருளியதுபோல், ஒன்றும் நீர் வருந்தாதே உமது பதியின்கண் இருந்து, அன்றினார் முனை முருக்கி அரசாளும்” என்று மொழிகின்றார். அக்காலத்து, அவர் தமக்கு அரசியலின்பால் பற்றின்மையும், அதனைப் புரிவது ஆண்டவன் திருவருள் வழி நிற்பதென்று கருதியிருந்த மையும் புலப்பட, “பாரோடு விசும்பாட்சி எனக் குமது பாதமலர்” என்று சொல்லி, “தேரூரும் நெடுவீதித் திருவாரூர்க் கெழுந்தருள, நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன்” என்று மொழிகின்றார்.

திருவாரூர்க்குச் சென்ற நம்பியாரூரர், பின்னை யும் சேரமானை நினைந்துகொண்டு சேரநாட்டு மகோதைக்கு வருகின்றார். சேரமான் அவரை எதிரேற்று எல்லையிலா மகிழ்ச்சி மிகுகின்றார். “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ?” நம்பியாரூரர் திருவஞ்சைக்களம் போந்து தங்கிச் சிவபரம் பொருளின் திருமுன் நின்று திருப்பதிகம் பாடிச் சிறக்கின்றார். அங்கே இறைவன் விடுத் தருளிய வெள்ளானையேறிக் கயிலாயம் சொல்லத் தொடங்குவார் மகோதையில் இருந்த “உயிரெல்லாம் சாற்றும் மாற்றங்கள் உணர்பெருந் துணைவரை” மனத்தில் நினைக்கின்றார். அதனையுணர்வால் உணர்ந்த சேரமான் தம்மருகு நின்ற குதிரை யொன்றின் செவியில் திருவைந்தெழுத்தையோத, அஃது அவரையேற்றிக் கொண்டு நம்பியாரூரர் ஏறி விண்வழிச் செல்லும் வெள்ளானையை யடைந்து