பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இ ஒளவை சு. துரைசாமி

முத்தனே முதல்வாதில்லை

அம்பலத்து ஆடுகின்ற

அத்தா உன் ஆடல் காண்பான்

அடியனேன் வந்தவாறே

என்று தொடங்கும் திருநேரிசையைப் பாடலுற்றார். விருத்தத் திருமொழிகள் தமது பத்தி நலத்தைப் பெருகக் காட்டாது சொல் நலத்தையே காட்டு கின்றன என்ற கருத்தாலோ, ஆராமையாலோ, எடுத்த எடுப்பில் “பத்தனாய்ப்பாடமாட்டேன்” என்று ஒதிக் கூத்தப் பெருமானை, நீ எனது பத்தி எல்லைக்கு அப்பால் மேம்பட்டுள்ளாய் என்பார். பரமனே என்றும், யோகியராவார் கருவிகரணங் களின் நீங்கி அறிவை மறைக்கும் மலத்தை வாட்டி அகக் காட்சியில் இன்புறுவாராக, போகங்களில் கலந்து ஒன்றாய் நின்றும் போகக் காட்சியொழியாத யோகம்புரிகின்றவனை என்பார்” பரமயோகி’ என்றும் எடுத்துரைக்கின்றார். ஞானசம்பந்தரும் இதனை வியந்து, “நல்லூர்ப் பெருமணத்தான் நல்லபோகத்தன் யோகத்தையே புரிந்தானே’ என்று இயம்புகின்றார். - . . . . - o

பரம யோகியாகிய உன்பால் பத்தி கொள்வ தாயின், அவ்யோக நெறியே பொருத்தமாயிருக்க, யான் அது செய்யாது திருக்கோயில் திருவலகிடல் மெழுகல் உழவராம் செய்தல் முதலிய எளிய செயல்களையே செய்கின்றேன் யோக ஞான நெறிகள்ை மேற்கொள்வேனல்லேன் என்றற்கு