பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

உமாபதி தேவரான ஞானசிவ தேவர்

இற்றைக்குச் சுமார் 800 ஆண்டுகட்குமுன் நம் தமிழ் நாட்டில் சோழவேந்தரும் பாண்டி வேந்தரும் நாடு காவல் புரிந்து வந்தனர். சோழநாட்டில் கோவிராச கேசரிவன்மனான இரண்டாம் இராசாதி ராசன் ஆட்சிபுரிந்து வந்தான். அப்போது பாண்டிய நாட்டில் மதுரையில் பராக்கிரம பாண்டியனும் திருநெல்வேலியில் குலசேகர பாண்டியனும் இருந்து வந்தனர். சோழ பாண்டியர்கள் தம்முட் பூசலின்றி இனிதிருந்தமையின், நாட்டில் இன்பவாழ்வு நிலவிற்று.

அந்நாளில் ஈழநாட்டில் வாழ்ந்த ஈழ வேந் தர்கள் மிக்க செல்வாக்குடன் இருந்தனர். அவர்கள் பால் பொருளும் படையும் பெருகியிருந்தன. அதனால் அவர்கட்கு நல்ல புகழும் உண்டாகி யிருந்தது. ஈழ வேந்தரது படைப்பெருக்கம் “இடம் சிறிது” என்னும் நினைவை எழுப்பிப் பிற நாடுகளை வென்று அடிப்படுத்த வேண்டுமென்ற தமிழ்