பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 இ. ஒளவை சு. துரைசாமி

என்றுரைத்து மகிழ்கின்றாள். இப்படியே, பரம னுக்குப் பலியிடச் சென்ற பெண்ணொருத்தி நிகழ்த்திய சொல்லாட்டினை நம் சேரமான்,

“அந்தண ராம்இவர் ஆரூர் உறைவதென் றேன்.அதுவே, சந்தணை தோளி! என்றார்; தலையாய சலவர் என்றேன்; பந்தனை கையாய்! அதுவுமுண் டென்றார்; உமைஅறியக் கொந்தணை தாரீர்! உரைமின்னன் றேன்; துடி

கொட்டினரே"4) என்று இன்புறப் பாடி நம்மை மகிழ்விக்கின்றார். இத்திருவந்தாதிக்கண் இத்தகைய பாட்டுக்கள் பலவுள்ளன.

இனி, திருவாரூர் மும்மணிக் கோவைக்கண் வரும் முப்பது திருப்பாட்டுக்களும் அகனைந் திணைக்குரிய பாட்டுக்களாகவே உள்ளன. களவு வழியொழுகிக் கற்புக்கடம்பூண்டு நிற்கும் தலை மக்கள் வாழ்வில் தலைவன்பால் பிரிவு நிகழ்கிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது. பிரிந்து செல்பவன், தான் கார்ப்பருவ வரவில் வருவதாகக் கூறித் தலைமகனைத் தேற்றிச் செல்கின்றான். அவளும் அவன் தெளித்த சொல் தேறியிருக்கின்றாள். ஆயினும், பிரிவுத் துன்பம் அவளை மட்டில் வருத்தாமல் இல்லை. அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது; அவன் வருகின்றானில்லை. அதனால் தோழி, தலைவி ஆற்றாளாவள் என்று எண்ணி,