பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 இ ஒளவை சு. துரைசாமி

யார்க்குத் தேறுதல் சொல்லி, ஊக்கம் கொளுத்தும் கருத்தாற் பிறந்த வினையுணர்வுகள், வினைக்கண் மனம் மடிந்து சோம்பித்திரிவார்க்கு அரணாகத் தொடங்கின. வினையே உயிர்கட்கு முதல் என்றும் வினைவழியே உயிர் இயங்குதற்குரிய தென்றும் மக்கள் பேசத்தொடங்கினர். வினைவழிப் பிறக்கும் இன்பமும் துன்பத்திற்கே ஏதுவென்றும், துன்பமே உயிர் உடலொடு கூடிப்பெறக் கடவ பயன் என்றும் சில சான்றோர் தெருட்டத் தொடங்கினர். இந் நிலையில், தமிழ் நாட்டிற்குப் புதியவாய் வந்த சமண புத்த சமயங்களும் துணை செய்யத் தொடங்கின. யாவரும் எப்போதும், எச்செயலைச்செய்தற்கும், “அந்தோ வினையே’ என்று அழுங்கி ஊக்கம் குன்றுவாராயினர்.

ஒருவன் தன் ஆண்மையால் முயன்று பெறக் கூடிய நல்லுண்டி, நல்லுடை, நல்லுறையுள் ஆகிய இவையாவும் முன்னை வினைப்பயனே; “பண்டு செய்வினையலால் பரவு தெய்வ மொன், றுண் டெனில் தான்பயன் உதவ வல்லதோ?’ என்பன போன்ற கருத்துக்கள் எழுந்து, நாட்டில் ஆண்டவன் அருட்டிறத்தையும், அவனை வழிபடுவதன் நலத்தை யும் அசட்டை செய்யுமாறு தூண்டின. இக்காலமே நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலமாகும்; தன் உயிரறிவுக் குள்ள சிற்றுரிமையை நெகிழ்த்து, வினைக்கு அடிமை யாக்கும் சிறுமைக்காலம், நலமும் தீங்கும், இன்பமும் துன்பமும் உயிர் தன் உரிமை

3 *