பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் ஞ் 307

நல்கூர்ந்தார்க் கிலை சுற்றம் என்றுநுண் நுகப்ப நைய

ஒல்கிப்போய் மாடஞ் சேர்ந்த ஒருதடங் குடங்கைக் - கண்ணார்” என்று கருத்தும் இடமும் ஒப்புக்கொண்டிருத்தலை நன்கு காணலாம்.

இதனால், நம் சேரமான், பாணபத்திரர், நம்பியாரூரர் முதலாயினார்க்குப் பெருஞ் செல்வம் வழங்கியதுபோல, புலவர் பலர்க்கும் கற்பனைச் செல்வமும் கலைச் செல்வமும் வழங்கியிருப்பது அவர் பெருந்தகைமைக்கு ஏற்ற சான்று பகர்கிறது. இவ்வாறு, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் “ஆயுந் தோறும் தோறும் இன்பம் தரும்” அறிவு நிலைய மாதல் தெளியப்படும்.

இச்சேரமான் “வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்” என்றலின், இவர் பொன்வண்ணத்தந்தாதி பாடி அரங்கேற்றிய காலத்தில், மூப்புப் பருவம் எய்துகின்ற வயதினராய் இருத்தலைக் காண்கின் றோம். இவ்வாறு இவர் பாடியவற்றை ஆராயின், பல அரிய பொருள்களைக் காண்டற்கு இடம் இருக்கிறது. இவர் பாடிய அகப் பாட்டுக்களில் அமைந்திருக்கும் உள்ளுறை நலம், உவமநலம் முதலிய பலவும் பேரின்பம் தருவனவாகும். அவை ஒரு புறமிருக்கச் சேரநாட்டுச் செண்டு விளையாட்டும் சிறு சோற்றுச் சிறப்பும் சீரிய ஆராய்ச்சிக்கு உரியதாகும். இவற்றை எழுதத் தொடங்கின் இது வரம்பின்றிப் பெருகு மென்றஞ்சி இம்மட்டில் நிறுத்திக் கொள்கின்றேன்.