பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 287

“கண்ணார் நுதலெந்தை காமரு கண்டம் எனஇருண்ட விண்ணால் உருமொடு மேலது, கீழது கொண்டல் விண்ட மண்ணார் மலைமேல் இளமயி லாள்மட மான்.அனைய பெண்ணா மிவள்இனி என்னாய்க் கழியும் பிரிந்துறைவே”

(3)

என்று சொல்லி வருந்துகின்றாள். பின்பு தலைமகன் போந்து கூடி இன்புறுகின்றான். அவன் மறுபடியும் பரத்தையிற் பிரிந்தொழுகுகின்றான். அத்தகை யோன் ஒருநாள் தன் மனைக்கு வந்தபோது தோழி முதலாயினார் வாயில் மறுக்க, ஆற்றாமையே வாயி லாக வந்தடைகின்றான். அடைந்தவன் தலைவியைத் தீண்டினானாக, அவள் புலந்து,

“பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம்

போல்இருண்ட மையார் தடங்கண் மடந்தையர் கேட்கின்பொல்

லாது,வந்துன் கையால் அடிதொடல், செல்லஎற் புல்லல், கலைஅலையல்; ஐயா, இவைநன்கு கற்றாய்; பெரிதும் அழகியவே” (21)

என்று உரைக்கின்றாள். பரத்தையை உயர்த்துக் கூறும் கருத்தால், அவர்களை “பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம் போல இருண்டமையார் பூணாது பொய்யன்பு பூண்டு பரவினும் பரமன் அருள் புரிவதுபோல, பொய்யே ஒழுகினும் அம்மகளிர் நின்னையேற்பர்; யாம் ஏலேம்; அவர் பாலே செல்க என்பது கருத்து. “கற்பு வழிப்பட்டவள்