பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 345

சொற்பொழிவுகள் செய்தனர். அச்சொற்பொழிவு கட்கு நாடாளும் வேந்தரும் வந்திருப்பர். பங்குனி உத்திரவிழாவொன்றில் திருவொற்றியூரில் இராசாதி ராசன் வந்திருந்து கேட்க, சதுரானை மடத்து வாகீச பண்டிதர் என்பவர் ஆளுடைய நம்பிகளின் வரலாற்றைச் சொற்பொழிவு செய்தாரென அக் கோயில் கல்வெட்டொன்று கூறுகின்றது. இவ்வாறு நாட்டில் ஆங்காங்கு மக்கட்குச் சமயவறிவும் சமய வொழுக்கமும் மடத்துத் தலைவர்களால் கற்பிக்கப் பெற்று வந்தமை நாட்டுவரலாற்றைப் பயில்வோர். இல்லாமையால் மறைந்துபோயிற்று. மடங்கட்கு அளவிறந்த பொருளும் தங்கட்குரிய அறத்துக்குப் புறம்பான தொழில்களும் உண்டாகவே, மடத் தலைவர்கள் ஏனைப் பெரிய பெரிய இல்லற மிராசுதார்களைப் போலத் துறவற மிராசுதார்களாய் விட்டனர். -

அந்நாளில் உமாபதி தேவரென்னும் சான்றோர் காஞ்சி நகர்க்குத் தெற்கில் ஏழெட்டுக்கல் தொலைவி லிருக்கும் மாகறல் என்னுமிடத்தில் மடம் ஒன்று நிறுவி மக்கட்குச் சிவதன்மங்களையும் சிவ ஞானத்தையும் அறிவுறுத்தி வந்தார். சிவஞானச் செம்பொருளை வரையாது வழங்கியதுபற்றி அவரை ஞானசிவதேவரென்றும் மக்கள் பாராட்டிப் பரவினர். அப் பகுதிக்குத் தலைவனாகிய எதிரிலி சோழச்சம்புவராயன் அவர்பால் தீக்கை பெற்று அவர்க்கு ஞானப்புதல்வனானான். அவர் இனி