பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 19

மனையறம் புரியும் ஒழுகலாறாகும். அக்காலத்துத் தோன்றும் காதலுறவு இடையீடும் இடையூறும் எய்துமிடத்து, காதலர் மேனிக்கண் தோன்றும் வாட்டமும் மெலிவும் குறித்துத் தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. குன்றவரிடையே நடக்கும் வெறி யாட்டு இதற்குச் சீர்த்த சான்றாகும். புற வாழ்வு என்பது மனையறம் புரிந்தொழுகும் மக்களிடையே பொருளும் புகழும் போர் வென்றியும் பிறவும் பற்றி நிகழும் ஒழுகலாறாகும். -

புறவாழ்வின்கண், அகத்துறை இன்பம் நுகர்ந்தும் புறத்துறைப் புகழும் வென்றியும் எய்தியும் உவர்ப்புற்ற சான்றோர் “சிறந்தது பயிற்றல்” என்னும் துறவு வாழ்க்கை மேற்கொள்வது பண்டைத் தமிழர் சமயக் கொள்கையாகும். “காமம் சான்ற கடைக் கோட் காலை ஏமம் சான்ற மக்களோடு துவன்றி, அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும், சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” என்பது தொல் காப்பியம். இங்கு இறத்தல் என்றது வயது முதிர்தல். பொருள் இன்பங்களின் சுவை காணாத ஒருவன் துறவு மேற்கோடல் என்பது தமிழர் சமயக் கொள்கைக்குப் புறம்பானது. இச்சான்றோர் இன்பமும் துன்பமுமாகிய இரண்டினையும் ஒரு சேரவுவர்த்து வினையின் நீங்கி விளங்குபவராதலின், இவர்கட்குத் தெய்வ வழிபாடு கிடையாது. இவர்களால் வழிபடப்படுவது கடவுள் எனப்படும் முழுமுதற் பெரும் பொருளேயாகும். அதனால்