பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இ ஒளவை சு. துரைசாமி

10. பெருமானைச் சிற்றம்பலத்தே கானப் பெற்றாமாகலின் தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான். -

ஆரூரன் தம்பிரான் ஆரூரன்-ஆரூரருக்குத் தலைவனாகிய திருவாரூர் இறைவன்.

காஞ்சிவாய்ப் பேரூரில் நம்பியாரூர் கண்ட காட்சியின் இயல்பைச் சேக்கிழார் இனிது எடுத்து உரைக்கின்றார்.

ஆருரர் திருப்பாண்டிக் கொடுமுடி வணங்கி நமச்சிவாயத் திருப்பதிகம் பாடிப் பரவிக் கொண்டு காஞ்சிவாய்ப் பேரூரை அடைகின்றார்.

அவர் வரவு அறிந்த பேரூர் வாழும் மெய்த்தவர் பலரும் சூழ்வரத் திருக்கோயிலுட்புகுந்த நம்பிகள், தில்லைமன்றுள் சிவபரம்பொருள் நின்றாடும் நீடிய கோலம் கண்டார். கைகள் தலையில் குவிந்தன; கண்கள் உவகைக் கண்ணிரைச் சொரிந்தன.

கைதொழுத ஆரூரர் தரைமிசை வீழ்ந்து எழுந்திருக்கவும், உள்ளத்தே கரைகடந்து பெருகிய அன்பு அவரது என்பினையுருக்கிற்று; அவரது மெய்யுணர்வின் ஒரு வகை உயரிய இன்பம் பொங்கி எழுந்தது.

உணர்வின்கண் எழும் இன்பம் யாவும் ஐம்புலன்களால் அறியப் பிறக்கம் இயன் பின; ஆனால், மெய்யுணர்வில் ஊறும் மேதக்க இன்பம்