பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 105

பெய்யும் தகையன கரணங்களும் உடன்

உருகும் பரிவின பேறெய்தும் - மெய்யும் தரைமிசைவிழும் முன்பெழுதரும்

மின்தாழ்சடையொடு நின்றாடும் ஐயன்திருநடம் எதிர்கும்பிடும் அவர்

ஆர்வம் பெருகுதல் அளவின்றால்”

கைகள் தலைமேற் குவிந்துள்ள கண்ணில் மழை - போல் நீர் ஒழுகுகிறது; இவைகள் புறக்கருவிகள். அகக் கருவிகளான மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்ற கரணங்களும் அன்பால் உருகுகின்றன; இவ்விருகருவிகட்கும் இடமாகிய நாவுக்கரசரின் மெய்விழுவதும் எழுவதுமாகவுளது. மனமுதலிய கரணங்கள் அன்பால் உருகினால்ன்றிக் கைகள் தலைமேலேறி அஞ்சலி கூப்புதலும், கண்ணில் நீர்பொழிவதும் நிகழாவ்ாதலால், கையும் கண்ணும் கூறியவுடன் கரணங்களைக் கூறுகின்றார். கரணம் நான்காதலால், அவை உருகிய வழிப்பெருக்கம் மிகுதலால், “பெய்யும் தகையன கரணங்களும்” என்று உரைக்கின்றார். உருகுதற்கேது அன்பு என்பார், “உருகும்பரிவின’ என்கின்றார். அகமும் புறமும் ஒன்றப் பெறுவதுடன், ஆடும்பரமன் திருக்கூத்துக் காணும்பேறும் அதுவாயிலாக அவன் ஆடும் அம்பலத்தை மெய்யால் அடைந்து. ஆராவகையால் தொழுது வணங்கும் பேறும் ஒழுங்கு எய்துவது பற்றி “பேறு எய்தும் மெய்” என்று விளம்புகின்றார். கரணங்கள் உருகும் பரிவின ஆயினமையின், விசைக்