பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 இ. ஒளவை சு.துரைசாமி

ஞானசம்பந்தர்பால் உண்டான காதல் வேட்கையால் கண்ணுறக்கமின்றிக் கைவளை சோர்ந்து மேனி வேறுபட்டு இருக்கும் ஒருத்தியைத் தோழி, நெருங்கி எத்துணை வேறுபாடு எய்தினும் இவ்வாறு கைவளை சோர நிற்றல் நன்றன்று என்று கூற, அவட்கு விடையிறுக்கும் அத்தலைவி.

“ஊரும் பசும்புரவித் தேரொளித்த தொளிவிசும்பில் கூரும் இருளொடு கோழிகண்துஞ்சா கொடுவினையேற். ஆரும் உணர்த்திலர், ஞானசம்பந்தன் அம் தாமரையின் தாரும்தருகிலன் எங்ஙனம்யான் சங்கு தாங்குவதே”

- (கோவை:24,

என்று கூறுகின்றாள். இதன்கண் இரவு முழுதும் அவள் கண்ணுறக்கமின்றி யிருந்த குறிப்பை, தேர் ஒளித்தது, இருள் கூர்ந்தது, கோழி கூவிற்று என அந்திமாலையும், நடுவியாமமும் விடியற்காலமும் அக்கால நிகழ்ச்சி வாயிலாக உணர்த்துமாற்றால் தோற்றுவிக்கின்றாள். என்னோடு இருக்கும் தோழியாகிய நீ நன்கு உறங்கினை; என் கலக்கத்தை அறிந்திலை யென்பாள், ‘ஆரும் உணர்ந்திலர்’ எண்முன்னிலைப் புறமொழியாகப் புகல்கின்றாள். இனி, இதனால் வேறு ஒரு கருத்தும் குறிக்கின்றாள். என் கைவளை சோர்வது கண்டுநெருங்கியுரைக்கும் நீ, அச்சோர்வுக்கு ஏது வினையுணர்ந்து ஞான சம்பந்தன் பால் ச்ென்று, தார்பெற்றுவர முயல் கின்றிலை யென்றற்கு, “ஆரும் உணர்ந்திலர்” என் கின்றாள். மேலும், இதனால், தாயர் முதலாயினோர்