பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 183

பகையைச் சிதைக்கும்; நீவிர் கவலுதல் வேண்டா” என்பாராய்,

“நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்பம்நனி

பனிமதியணிந்த பொழில்சூழ் பொலமதில் இரும்புகலி அதிபதி விதம்பெருகு

புனிதகுணன் எந்தம்இறைவன் பலமலி தருந்தமிழின் வடகலை விடங்கன்மிகு

பரசமய வென்றியரிதன் சலமலி தருங்கமல சரண்நினைவன் என்றனது

தகுவினைகள் பொன்றும் வகையே”

என்று ஓதி வினைப்பகையைக் கெடுத்தற்கு விரகு கூறித் தெருட்டுகின்றார்.

இவ்வாறு, திருஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவடிநினைந்து வழிபடும் நெறியில் நம்மை அறி வுறுத்திக் கூட்டுவிக்கும் இச்சான்றோர் இவ்வகை யால் அடியராயினர் பெருமை இது எனப் பல பாசுரங்களின் வாயிலாகத் தெரிவிக்கின்றார். ஒன்று காட்டுதும். - -

“மேனாட் டமரர்தொழ விருப்பாரும் வினைப்பயன்கள் தாநாட்ட டருநரகில் தளர்வாரும் தமிழர்தங்கள் கோனாட்டருகர் குழாம்வென்ற கொச்சையர் கோன்கமலப் ழ்நாட்டடி பணிந்தாரும் அல்லாத புலையருமே”

எனபது காண்க. இதன்கண் அடிபணியும் பெரியோர் பேரின்ப வாழ்வில் இனிதிருப்பரென்பதும், பணியா

!