பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 157

பதினொன்றாப் பண்ணினார்” என்ற திருமுறை கண்டபுராணத் திருவிருத்தத்தால் அறிகின்றோம்.

நம்பியாண்டார் நம்பிகள் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்று அவர்பால் கலைத்துறை பலவும் கற்றுப் புகழ் நிறுவிய பின்பு இராசராசன் வேண்டுகோட்கிசைந்து பிள்ளையார் அருளால் திருமுறை கண்டனர். அதன் பயனாக அவர் நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் பொருளாக, உணர்ந்தவற்றைத் திருத் தொண்டர் திருவந்தாதியாகத் தொடுத்துப் பாடி யருளினார். -

நம்பியாண்டார் நம்பிகள் இராசராசன் பொருட்டுத் திருமுறை கண்டதும் பண் வகுத்தது மாகிய செயல்கள் செய்ததோடு திருச்சிற்றம்பல முடையான் பேரில் திருவிருத்தமும், ஞானசம்பந்தர் நாவரசர் என்ற இருவர் பேரிலும் பல நூல்களும் செய்துள்ளார். இது முன்பும் கூறப்பட்டது. இவர் இயற்றியனவாகப் பதினோராந் திருமுறையில், பத்து நூல்கள் காணப்படுகின்றன. அவற்றுள், பொல்லாப் பிள்ளையாரைத் திருவிரட்டைமணி மாலையாலும், திருச்சிற்றம்பலமுடையானைக் கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தாலும், திருத்தொண்டர்களைத் திருவந்தாதியாலும், திருநாவுக்கரசரைத் திருவேகாதச மாலையாலும் அவர் பாராட்டிப் பரவியிருக் கின்றார். எஞ்சி நிற்கும் ஆறு நூல்களும் ஞானசம்பந் தரைப் பாராட்டிப் பரவுவனவேயாகும். திருவந்தாதி