பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ; 211

நாள், கடற்கரையில் உள்ள நீர்நிலையில் ஆடை யொலிக்கும் ஏகாலிச்சிறுவர் விளையாடுவது கண்டார். அவரோடு தாமும் விளையாடலுற்று, அவர்கள் தம்மை ஒரிடத்தில் புதைத்தால் தாம் வேறோரிடத்தில் தோன்றிக் காட்சியளித்து இன்புறுத்தினார். இவ்வகையில் அவர்கள் தம்மை ஆழத்தில் புதைக்குமாறு செய்து, இறுதியில் அவர் காட்சி வழங்காது சிவலிங்கமாக மாறினார் என்பர்.

பிள்ளையார் சீர்காழியில் தங்கியபோது திருக்கழுமல மும்மணிக்கோவையும், காஞ்சி மாநகரில் திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், திருவொற்றியூரில் திருவொற்றியூர் ஒருபாவொரு பதும், தில்லையில் கோயில் நான்மணி மாலையும் பாடியருளினார்.

பிற்காலத்தே சுமார் இருநூறு இருநூற்றைம்பது ஆண்டு கட்கு முன்பு தோன்றிய துறவியொருவர் பட்டினத்துப் பிள்ளையென்ற பெயரால் நிலவினர். அவரும் சில பாட்டுக்களைப் பாடினர். பிற்காலத் தார் அவரையும் திருவெண்காடான பட்டினத்துப் பிள்ளையென்றே கொண்டு அவர் பாடல்களையும் பிள்ளையார் பாடலாகக் கருதிப் பேசலாயினர். உண்மை யாராய்ச்சி, இருவரையும் வேறாக்கி, இருவர் பாடல்களையும் வேறுபடுத்திக் காட்டிவிட்டது.

சிவனை வழிபடும் சைவர்களுக்கு வேதம், சிவாகமம், புராணம் முதலியன சமய நூல்களாகும். வேத நான்கும் இறைவன் திறமே மொழியும்;