பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 115

4. அல்லல்.பூண்டேனுக்கே சிற்றம்பலர்க்கு எல்லையில்லா அடிமை பூண்டேனாதலால் அல்லலோ அருவினையோ, தொல்லை வினைத்தொத்தமோ ஒன்றும் ஒரு தீங்கும் செய்யாது என்று தெளிவுற்றுக் கூறுகின்றார்.

5. ஊனிலாவி.வைப்பரே இதன்கண், சிற்றம்பலவனாகிய என் நாதனை என் உடம்பில் உயிர் இருக்குங்காறும் நான் பரவிப் பணிந்து கொண்டிருப்பேன்; அவர் என்னை வானுலகத்தே வாழவும் செய்விப்பர் என்கிறார்.

6. சிட்டர்.காலனே இப்பாட்டில் சிட்டரும் வானவரும் தொழும் சிற்றம்பலவன் சேவடி கைதொழச் செல்லும் அச்சிட்டர் பால் காலன் அணுகான் என்கிறார்.

7. ஒருத்தனார்.அறிவரே இப்பாட்டின்கண், சிற்றம்பலவனார் உலகுக்கு ஒரு சுடராயினும் ஒருத்தனார், திருத்தனார்; விருத்தனார்; இளையார்; விடமுண்ட அருத்தனார்; அவர் அடியாரை அறிந்த அருள் புரிவதில் தவறார் என்று கூறுகின்றார்.

8. விண்ணில நீத்தோர்.ஒருவனே இதன்கண், வெள்ளழலின் உருவாகி இருவர்க்கு அறிவொனாது, அம்பலத்துள் நிறைந்து நின்றாடுவன் ஒருவன் என்று உரைக்கின்றார்.