பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 இ. ஒளவை சு. துரைசாமி

பெருமையுடையதாகும். இருவரும் சைவத் தெய்வக் கவிஞர் பெருமக்கள். பிற்காலத்தில் குமரகுருபரரைப் போன்று கொழிதமிழ்ப் பாடல் பாடினார் எவருமிலர். அவர் வாக்கே தெய்வவாக்கு என்று சொல்லத்தகும். அவரைப் போன்று பிற்காலத்தில் சிவஞான முனிவரே உரைவல்ல பெரியாராக விளங்கினார். அவர்தம் உரைபோன்று உரை வரைந்தார் பிற்காலத்து எவருமிலர். ஆகவே இவ்விரு பெரும் புலவர்களும் முறையே பாட்டாலும் உரையாலும் தமிழுலகுக்கு நிகரற்ற பணியாற்றினர்.

குமரகுருபரர் தோன்றிய காலத்தில்தான் மேனாட்டவரும் நம் நாட்டில் புகத் தலைப்பட்டனர். தென் பாண்டி நாட்டில் தான் முதன் முதலில் கிறித்தவ மதத்தைப் பரப்ப முற்பட்டனர். இத்தாலிய நாட்டினின்று நம் நாடு போந்த வீரமாமுனிவர் (Fr. Joseph Beski) கிறித்தவம் பரவச் சீரிய பணியாற்றத் தொடங்கிய காலம். இவர், நம் குமரகுருபர அடிகளாரிடம் மாணவராக இருந்து தமிழ் பயின்றார் என்றும் கூறுப.

இவர் காலத்தில் தென்பாண்டி நாட்டின் ஊர்தோறும் பெருங்கோயில்கள் எழுந்தன. பிற்காலப் பாண்டியர் பல சிவன் கோவில்களை ஆங்காங்குத் தோற்றுவித்தனர். திருப்புடைமருதூர், அத்தியான நல்லூர், அரிகேசரி நல்லூர் முதலிய இடங்களி லெல்லாம் திருக்கோயில்கள் தோன்றின. அப்போது திருநெல்வேலியை ஆண்ட மன்னன், ‘வென்று