பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 ஒளவை சு. துரைசாமி

என விலக்குவதும் செய்வர். “கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று, நீர்வழிப் படுஉம் புணை போலாருயிர், முறைவழிப் படுஉ மென்பது திறவோர், காட்சியிற் றெளிந்தனம்” (புறம் 192) எனவும், “வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை” (புறம் 367) எனவும் வருதல் காண்க. மேலும், இப்பெருமக்கள் பலரும் நலம் பயக்கும். நல்வினையையே விதந்து கூறியிருத்தலின், வினை யுணர்வு நல்லது செய்தற்கே சான்றோர்களால் பண்டைக் காலத்தில் மக்கட்கு வற்புறுத்தப் பட்டதென்பது தெரிகிறது. “நல்லது செய்தலாற்றீரா யினும், அல்லது செய்தல் ஒம்புமின்’ (புறம் 195) எனவும், “நன்றுபெரிது சிறக்க தீதில்லாகுக” (ஐங்.9) எனவும் வருதல் காண்க. நல்வினைசெய்தவர் இம்மையிற் புகழும், மறுமையில் துறக்கவின்பமும் பெறுவர் என நல்வினையின் நலமே குறித்து. “பெரும்பெயர் நும்முன், ஈண்டிச்செய் நல்வினை யாண்டுச் சென்றுணியர், உயர்ந்தோருலகத்துப் பெயர்ந்தனன்” (புறம். 174) என மாறோகத்து நப்பசலையாரும். “மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே வானோர், அரும்பெற லுலகத்தான்றவர், விதுப்புறு விருப்பொடு விரிந்தெதிர் கொளற்கே” (புறம். 213) எனப் புல்லாற்றுார் எயிற்றியனாரும் பிறரும் அறிவுறுத்தி யிருக்கின்றனர். அகப்பொரு ணுால்களும், இவ்வாறே, நல்வினை இம்மையில் இசையும் மறுமையில் துறக்கமும் பயக்குமெனக்