பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 இ ஒளவை சு. துரைசாமி

அரபுரத்தானடி எய்துவன்என்பது அவனடிசேர் சிரபுரத்தான் அடியார் அடியான்எனும் திண்ண்னவே”

என்று கூறுகின்றார். இவ்வாறு எடுத்து மொழிந்தவர். இதற்குத் தக்க எடுத்துக் காட்டும் ஒதுகின்றார். எடுத்துக் காட்டும் அளவை வகைகளுள் ஒன்று.

அது,

“காரங் கணைபொழில் காழிக் கவுணியர் தீபன்நல்லூர்ச் சீரங் கணைநல் பெருமனந் தன்னில் சிவபுரத்து வாரங் கணைகொங்கை மா தொடும்புக்குறும்

போதுவந்தார் ஆரங் கொழிந்தனர் பெற்றதல் லாலவ் வரும்பதமே”

என்பது.

இதனைக் கேட்குமவர் நெஞ்சில் தாமும் ஞானசம்பந்தர் திருவடி பரவி அப்பேரின்ப வாழ்வு பெறுதற்கு முயலவேண்டும் என்ற வேட்கை கொள்வர், நினைத்தலும் செய்வர். அந்நினைவு நெடிது செல்லாது இடையற்றுப் போதலும் உண்டு. அப்போது, தம்மை, நினையவொட்டாது தடுப்பது வினையென்னும் உணர்வுதோன்றி அவர் உள்ளத்தை அலைக்கும். அதனால் அவர் மனம் கலங்குவர். அக்கலக்கமறிந்தே, நம்பியாண்டார் நம்பிகள், “உங்கள் முயற்சியை முன்னை வினைப்பயன் போந்து இடையூறு செய்து கெடுப்பதாக எண்ணுகின்றீர்கள்; ஞான சம்பந்தன் திருவடி வழிபாடு அவ்வினைப்