பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 இ. ஒளவை சு. துரைசாமி

மொழியுங்கால் அவன் பெரியதிற் பெரியன் என்றும் சிறியதிற் சிறியன் என்றும் மொழியும்; (கோயில் 12). சிவாகமங்களுக்குச் சித்தாந்த மென்பதும் பெய ராகலின் அவற்றைச் ைவசித்தாந்த மென்றும், அவற்றை இறைவனே உபதேசித் தருளினன் என்றும் சைவர் கூறுவர்; இக் கருத்தையே பட்டினத்துப் பிள்ளையாரும், கைவல நெல்லியங் கனியது போலச், சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர்வாய (கழுமல, 13) என்றும், வேதம், மந்திரம், வேள்வி, இசை முதலியவற்றையும், ஞானசிவாகம வகைக் கலைகளையும் ஒழுக்க நெறிகளையும், பத்தி நெறிகளையும் விளக்குவன (கழுமல. 22) என்றும் கூறினர்.

இத்தத்துவ ஆராய்ச்சி நெறியால் தன்னை யறிவதும், அதனால் தலைவனான சிவனையறிவதும் வேண்டும் என்பர்; “தன்னை யறியத் தலைப்படும் தலைமகன்” என்றும் சான்றோர் கூறுவர். அத் துறையில் சென்று தற்காண்டல் முயற்சியில் ஈடுபட்ட பிள்ளையார், உடலை, மயிர், தோல், புண், குருதி, எலும்பு, எலும்பிடையுள்ள மூளை விழுது, அதனுள் ஒழுகும் வழும்பு, புழு, மலம், நரம்பு, பிணி எனப் பகுத்துக்கண்டு, ‘இன்னது யானென் றறியேன் என்னை, எங்குந்தேடினன் யாதிலும் காணேன்” (திருவிடை 13 என வுரைப்பர். உடற் கூற்றாராய்ச்சி யையும் தெரிந்து கொண்டு தெரியாதது காண்டல் வகையில் மயிர் தோல் முதலிய புறப்பொருளி