பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 235

அனைவர்க்கும் அருள் நோக்கம் செய்து இறைவன் உலா வந்தமைகின்றான் என்பதே இதன் பிண்டித்த பொருளாகும். இதனைச் சிறிது விளக்கிக் காட்டு வோம்.

“திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா தன்றுஅங்கு அருமால் உற அழலாய் நின்ற - பெருமான்; பிறவாதே தோன்றினான், காணாதே காண்பான், துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால் ஆழாதே ஆழ்ந்தான் அகலாது அகலியான், ஊழால் உயராதே ஓங்கினான், - சூழ் ஒளிநூல் ஒதா துணர்ந்தான் நுணுகாதே நுண்ணியான் யாதும் அணுகாது அணுகியான் - ஆதி அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனும் தானே - பரனாய தேவர் அறியாத தோற்றத்தன், தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான் - ஒவாதே, எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் -

எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்கும் காண்பரிய எம்பெருமான்.”

இப்பெருமான் சிவலோகச் சிவபுரத்துத் திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றான். தேவர் பலரும் வந்து அவனை வணங்கி, “எங்கட்குக் காட்சியருள்” என்று இரந்து கேட்கின்றனர். பரமன் அவ்வேண்டு கோட்கு இசைந்தருள, அவனையும் இறைவியையும்