பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஒளவை சு. துரைசாமி

ஊனசம்பந்தம் அறுத்து உயக் கொள்ள வல்ல ஞானசம்பந்தன் இஞ் ஞாலத் திடையே. ஞானசம்பந்தரின் செயல்களுட் சிற்சிலவற்றைத் திருவந்தாதியில்,

“அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினை,

யன்று உடைத்தது பாணன்தன் யாழின் ஒலியை உரகவிடம் துடைத்தது; தோணிபுரத்துக் கிறைவன் சுடரொளிவாய்ப் படைத்தது தண்மையை நள்ளாற்றரசு பணித்திடவே.”

என்றும், திருக்கலம்பகத்தில்,

“பண்டமுது செய்தது உமை நங்கையருள்

மேவு சிவ ஞானம்; பைந்தருள நன்சிவிகை செம்பொன் அணி

நீடுகிற தாளம், கொண்டது.”

என்றும் ஒதுகின்றார்.

இவற்றுள் சில செய்திகளையே நம்பியாண்டார் நம்பிகள் பல விடங்களில் பல படியாகப் பாராட்டு கின்றார். இவற்றுள் முன்னணியில் நிற்பது சம்பந்தர் ஞானப்பால் உண்டதாகும். இதனை மட்டில் ஐந்தாறு இடங்களில் பாராட்டிப் பேசுகின்றார். ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையின்கண் ஞானமுண்ட திறத்தை இனிமையுற விரித்துக் கூறலுற்று, “. #