பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 273

சிவபோகத்தைத் தரும் என்று இவர் துணிகின்றார். அத்துணிவை,

“மாயன்நன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடிமை ஆயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே; காய்சின யானை வளரும் கனக மலையருகே போயின காக்கையு மன்றே படைத்ததப்

பொன்வண்ணமே” (100)

என்று வெளிப்படுத்துகின்றார்.

இவ்வந்தாதியின்கண் இவர், தாம் இவ்வந்தாதி யைப் பாடிய காரணம், தம் கருவி காரணங்களைச் சிவத்தொண்டில் ஈடுபடுத்துதல், உடல் வாழ்வின் உயர்வின்மை, தொண்டு செய்யும் முறை, தொண் டினை யேற்றும் பரமனுடைய அருமை நிலை, அம்மையப்பனாய் எழுந்தருளும் திறம், அட்ட மூர்த்தியாய் அமைதல், அகப்பொருட்டுறைகள், இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல்லாடல்கள், இனிய காட்சிகள் எனப் பல பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றின் நலம் காண்டற்கு முயல்வோமாயின், இச் சொற்பொழிவு மிக நீட்டிக்கு மாதலின், வகைக்கொன்று காட்டி மேற்செல் கின்றேன்.

இவ்வந்தாதி பாடிய காரணம் கூறுவார், ஏனையோர் போல நூலின் தொடக்கத்திலோ முடிவிலோ கூறாது இருபது பாட்டுகள் பாடிப் பின்பு கூறலுறுகின்றார். முதற்கண் தமக்குக் கவிபாடும்

த.செ.-18