பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 197

கூடாமை கருதி, வினைப் பயன்களைக் கூட்டலும் பிரித்தலும் வல்ல அவனையே நல்குரவும் செல்வமும், துன்பமும் இன்பமுமாக உபசரித்துக் கூறியும், அவனுக்கு முதன்மையும் வினைகட்குக் கீழ்மையும் காட்டியும் நம் ஆளுடையபிள்ளையார் தெருட்டியருளுகின்றார்.

வினைகள் தம் பயனை வினைமுதல் நுகருமாறு கூட்டும் அறிவுடையவல்ல வாயினும், அவ் வினை முதலைப் பற்றி விடாது தொடர்ந்து நின்ற, அவ்வுயிர் எத்துணைப்பிறவி யெடுக்கினும், பிறப்புத்தோறும் அதன்கட் கிடந்து தொடர்தல் குறித்து அவைகளை “அருவினை” யென விசேடித்தல் நம் நாட்டுச் சமயக்கணக்கர் மரபு. நம் ஆளுடைய பிள்ளையாரும், வினைகளை “அருவினை, யென்று விசேடிப்பாரா யினும், அவற்றின் அருமையினைச் சிதர்க்கும், தலைமை ஆண்டவற்குண்டென வலியுறுத்துவதை விடுவதிலர்.

“பணிந்தவர் அருவினை பற்றுறுத் தருள்செயத் துணிந்தவன் தோலொடுநூல் துதை மார்பினில் பிணிந்தவன் அரவொடு பேரெழி லாமைகொண் டணிந்தவன் வளநகர் அந்தண் ஐயாறே”

என்பதும் பிறவுமாகிய திருப்பாட்டுக்கள் இவ் வுண்மையை நிலை நிறுவுகின்றன.

இனி, உயிர்களைப்பற்றிநிற்கும் வினைகளின் தொடர்பு கெடுதற்கு ஆண்டவனை வழிபடும்