பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 ஒளவை சு. துரைசாமி

முடையான் ஆகியோர் கோயிற்கு நிலம் விற்று விலைப் பிரமான ஒலையெழுதித் தருகின்றார்கள்.

24-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் போகைய தண்டல் நாயகர் ஆணைப்படி இருவர், கோயிற்கு நிலம் விற்று “திரவியச் செலவு கையீடு” தருகின் றார்கள். (13-4/1937-38) :

29-ஆம் ஆண்டிற் பிறந்த கல்வெட்டொன்று பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்றுத் துறையூருடை யான் அரையன் நித்த கல்லியாணனான பாண்டி ராசன், திருவானைக்காவுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேசுர தேவர் கன்மிகட்கு தங்களுடையதும் தங்கள் மாதாக்களதுமான நிலத்தை அவர் (மாதா) இறந்துபட்டமையின் தன்மதானமாகக் கொடுப் : பதைக் கூறுகிறது. (337/8) வேறே இரண்டு கல் வெட்டுக்களில் பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்று இசனைக் குறையூரவரும், அவ்வூர் கழனி வாயிலுடை யான் அனுமனமுடையானும் அவன் தம்பி நம்பியும், திருவானைக்கா கோயிற்கு நிலம் தருகின்றார்கள். (338-9/8) -

இனி, காலம் புலப்படாதபடி இவ்வேந்த னுடைய கல்வெட்டுக்கள் சில இக்கோயிலில் உள்ளன. அவற்றிலும் ஆனைக்காவுடைய பெருமான் கன்மிகட்கு நிலம் விற்ற செய்தியே காணப்படுகிறது.

இவ்விடைக் காலச் சோழராட்சியின் வீழ்ச்சிக் காலத்து இறுதியில் இருந்தவன் மூன்றாம் இராசேந் - திரன்; 1246-இல் இளவரசனாகி, அப்பொழுதே