பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் ஒ 257

பிள்ளையார் ஒதுவது காண்க. இப்பொருண்மொழி, உயிர்கள் உய்தி பெறுதற்பொருட்டு வழங்கியதொரு பேரருள் நெறியாதலை வற்புறுத்துவார், ஆசிரியர், இதற்கு உரை கூறலுற்றுத் “தொல்லுயிர்யாவையும் வாழி அஞ்செழுத்தோதி வளர்கவே” என்றார். தாம் அறிவுறுக்கும் மெய்ந்நெறிச் செம்பொருளாகிய இதனையறிந்து கடைப்பிடித்தற்குரிய உயிர்கள் அனாதி நித்தியமாதல் பற்றித் “தொல்லுயிர்” என்றும், அவ்வுயிர்வகை பலவும் அடங்க, ‘யாவையும்’ என்றும், இத்திருநாமம் நெஞ்சில் நிலவாதவழி, வாயாற் பிற பொருளில் மொழிகளைப்பேசிப் பிறப் பிறப்புக்களை எய்துவித்துக் கொள்பவாகலின், நெஞ்சின் செயலு மகப்பட, “ஓதி'யென்றும் கூறினா ரென வுணர்க.

வாயால் ஒதுந்திறம் நெஞ்சம் சூழ்தலானாம் என்பதுபற்றி இவ்வாறோதின. ரென்றலுமொன்று. ‘துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும், நெஞ்சம் நைந்து நினைமின்” என்றோதிய பிள்ளையார், காதலாகி என்ற திருப்பாட்டில் ‘ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது” என்று ஒதுதலாலும், சிவஞான போதத்து ஒன்பதாம் சூத்திரத்தில் “விதியெண்ணும் அஞ்செழுத்தே’ என்று ஒதிய மெய்கண்டதேவர், தாம் உரைத்தருளிய பொழிப்பின்கண் “விதிப்படி உச்சரிக்க” என்றே யுரைத்தலாலும், ஒதுதல் என்ற தொழில் நெஞ்சின் நினைத்தற்றொழிலும் அகப் படுத்து நிற்றல் துணியப்படும். இக்கருத்தே, ஈண்டுப்

த.செ.-17