பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 245

“வாழ்க அந்தணர்,” என்று தொடங்கும் திருப்பாசு

ரத்துக்குப் பொருள் கூறுவார்,

“அந்தணர் தேவரா னினங்கள் வாழ்கஎன் றிந்தமெய்ம் மொழிப்பய னுலக மின்புறச் சந்தவேள் விகண்முதல் சங்கரர்க் குமுன் வந்தவர்ச் சனைவழி பாடு மன்னவாம்”

என்று உரைத்தருளுகின்றார்.

உரை : அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்க என்ற இந்த மெய்ம்மொழிப் பயன் - அறவோர்களும் தேவர்களும் பசுக்கூட்டங்களும் வாழ்க என்று ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த இந்த மெய்ம்மை சேர்ந்த திருமொழியின் பயன்யாது எனின்; உலகம் இன்புற - உலகில் உள்ள உயிர்கட்கு இன்பம் மிகவும்; சங்கரர்க்கு - சிவபெருமான் பொருட்டு; சந்த வேள்விகள் முதல் - மறையோதிச் செய்யும் வேள்வி முதலாக, முன்வந்த - முன்னை நாள் தொட்டு நடைபெற்றுவந்த, அர்ச்சனை வழிபாடுமன்னவாம் - மலரிட்டு அருச்சித்தலும் பிறவுமாகிய வழிபாடுகள் நிலைபெற நிகழவுமாம் எ-று.

என்றது, ஆளுடைய பிள்ளையார் தாம் அருளிச் செய்த திருப்பாசுரத்தின்கண், வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்றது, உலகம் இன்புறுதற்கும் தொன்றுதொட்டுச் சிவபரம் பொருட்கு நடைபெற்று வந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் நிலைபெற்று நிகழ்தற்குமாம் என்று உரைத்தவாறாம்.