பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 இ ஒளவை சு. துரைசாமி

‘அண்டமார் இருளுடுகடந்து உம்பர் உண்டு போலும்” ஒண்சுடராகலின், அப்பால் நின்ற பேரொளியை என்றார். -

தாண்டகம் பாடித் தமிழால் வழிபட்டு வரும் நாளில், செஞ்சடைக்கற்றை எனத் தொடங்கும் திருநேரிசையைப் பாடி அப்பதிகத்தில் சிற்றம் பலத்தே அருள் திகழத் துளங்கெரியாடுதலால், நஞ்சுடைக் கண்டனாரைக் கண்ணாரக் காணலாம் என்று கூறுகின்றார்.

அப்டிஇகத்துள், தில்லையை, மஞ்சடை சோலைத்தில்லை (); நாறு பூஞ்சோலைத் தில்லை (; கடிகொள்பூந்தில்லை (3), செய்யெரிதில்லை (4): காரிடம் தில்லை (6); மதர்த்து வண்டறையும் சோலைமல்குதில்லை (); சிறைகொள் நீர்த்தில்லை (8); நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மதியந் தோய்தில்லை (1) என்று சிறப்பிக்கின்றார்.

இவ்வாறு கூத்தப் பெருமானை இடையறவின்றி வாய் மலர்ந்து பாட நெஞ்சு அன்பு சூழ்ந்து உருக, கண்ணிலே நீர் நிறைந்து சொரிய திருக்கை உழவாரப்பணி செய்யத் திருநாவுக்கரசர் தில்லையில் பன்னாள் தங்கிச் சீர்காழியில் சம்பந்தர் தோன்றி ஞானசம்பந்தரானது கேள்வியுற்று அவரைக் காணச் சென்றார். சென்றவர் வேறுபல பதிகட்குச் சென்று முடிவில் திருப்புகலூரில் சிவன் சேவடி அடைந்தார். மீட்டும் அவர் தில்லைக்கு வந்த குறிப்பு வரலாற்றில் இல்லை. - - - -