பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 247

மழைவளம் பெருகுமென்பதனை அடுத்த பாட்டிற் கூறுதலால், வேதவேள்வி நிலைபெறுவது குறித்துப் பிள்ளையார் தேவர் வாழ்க என்றார் என்று ஆசிரியர் உரைக்கின்றார். பிறாண்டும் வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி, என வேதவேள்வி நிலைபெறுவதையே குறிக்கொண்டும் அதனால் விளைவது குறைவற்ற இன்பவாழ்வென்பார் பிள்ளையார். “மாதவர்களன்ன மறையாளர்கள் வளர்த்த மலிவேள்வியதனால், ஏதமதிலாதவகை இன்பமமர்கின்ற எழில் வீழிநகரே, (திருவீழி 5) என்றும் ஒதுவது காண்க. இனி சமண் சமயச் செல்வாக்கு மிகுதியால் நாட்டில் வேதவேள்வி நிலைபேறின்றிக் கெட்டிருந்தமையின் அது நிலை பெறவேண்டிச் ‘சந்தவேள்விகள் மன்ன” என்றா ரென்பது உமாம். ஆவடுதுறையில் இறைவன் அருளிய பொற்கிழியினைப் பிள்ளையார் தம் தந்தையார்க்குக் கொடுத்தபோது, ‘ஆதிமாமறை விதியினாலாறு சூழ்வேனி, நாதனாரை முன் னாகவே புரியநல்வேள்வி, தீது நீங்கநீர் செய்யவுந் திருக்கழுமலத்து, வேத வேதியரனைவரும் செய்யவும் மிகுமால்,” (திருஞான. 429) என்று உரைப்பதும்: இக்கருத்துக்களை வலியுறுத்துவது காணலாம்.

“அந்தணர் வேள்வியும் அருமறைத் துழவியும்

செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்

பந்தனை மெல்விர லாளொடும் பயில்விடம்

மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.” (திருமழபா. கொல்லி. 3) என்ற திருவாக்கு ஆளுடைய பிள்ளையாரின் குறிக்கோள்கள் இவை யென்பதுணர நிற்றல் காண்க.